மத்திய மந்திரி மீனாட்சி லேகி கிரீஸ் நாட்டிற்கு 2 நாட்கள் சுற்றுப்பயணம்


மத்திய மந்திரி மீனாட்சி லேகி கிரீஸ் நாட்டிற்கு 2 நாட்கள் சுற்றுப்பயணம்
x

மத்திய மந்திரி மீனாட்சி லேகி நாளை கிரீஸ் நாட்டிற்கு பயணம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மத்திய வெளியுறவு மற்றும் கலாச்சாரத்துறை இணை மந்திரி மீனாட்சி லேகி வரும் ஜனவரி 30-ந்தேதி(நாளை) கிரீஸ் நாட்டிற்கு பயணம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரீஸ் நாட்டில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மீனாட்சி லேகி, அங்கு அந்நாட்டின் வெளியுறவு மற்றும் கலாச்சாரத்துறை மந்திரிகளை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை உள்ளார். மேலும் அந்நாட்டில் வசிக்கும் இந்தியர்களை சந்தித்துப் பேச உள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா-கிரீஸ் இடையிலான நீண்ட கால நட்பு ரீதியிலான உறவு மேலும் வலுப்படுத்தவும், நீடித்த ஒத்துழைப்பிற்கான புதிய வழிகளை கண்டறியவும் இந்த சுற்றுப்பயணம் உதவும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Next Story