நாகாலாந்து மாநிலத்தில் பழங்குடியின பெண்களுடன் நடனமாடிய மத்திய மந்திரி


நாகாலாந்து மாநிலத்தில் பழங்குடியின பெண்களுடன் நடனமாடிய மத்திய மந்திரி
x

நாகாலாந்து மாநிலத்தில் பழங்குடியின மக்களின் பாரம்பரிய நடனத்தில் எல்.முருகன் கலந்து கொண்டு நடனமாடினார்.

நாகாலாந்தின் பெக் மாவட்டத்தின் இந்திய எல்லையில் அவகுங் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்துக்கு சென்ற மத்திய மந்திரி எல்.முருகன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அந்த பகுதியைச் சேர்ந்த பழங்குடியின மக்களின் பாரம்பரிய நடனத்தில் எல்.முருகன் கலந்து கொண்டு நடனமாடினார்.

அங்கு நடந்த விழாவில் பேசிய எல்.முருகன், 'நரேந்திர மோடியின் ஆட்சியில் ஏற்பட்டுள்ள உள்ளடக்கிய வளர்ச்சியால் இந்தியாவின் எல்லை கிராமங்கள் இனி இந்தியாவின் கடைசி கிராமங்கள் அல்ல, முதல் கிராமங்கள்' என கூறினார்.


Next Story