உ.பி. ஹத்ராஸ் சம்பவம் - உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்


உ.பி. ஹத்ராஸ் சம்பவம் - உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்
x

ஹத்ராஸ் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் இன்று இந்து மத சத்சங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற நிலையில், நிகழ்ச்சி முடிந்து மக்கள் புறப்பட்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 107 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் ஹத்ராஸ் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மீட்புப் பணிகளில் உத்தர பிரதேச அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


Next Story