காதலியின் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட காதலன் - போலீசார் விசாரணை
உத்தரபிரதேசத்தில் காதலியின் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் காதலன் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஹ்ரைச்,
உத்தரபிரதேச மாநிலம் பஹ்ரைச் பகுதியில் காதலியின் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் காதலன் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இக்பால் என அடையாளம் காணப்பட்ட அந்த நபர், ஒரு பெண்ணை திருமணம் செய்ய விரும்பினார். அவர்களின் காதலை அந்த பெண்ணின் தந்தை விரும்பவில்லை. இதையடுத்து நேற்று பஞ்சாயத்து கூட்டம் கூட்டப்பட்டது. பின்னர் இரவில், அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் சந்திக்க முடிவு செய்தனர். இதையறிந்த அந்த பெண்ணின் தந்தை இருவரையும் தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அந்த பெண்ணின் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இக்பால் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த இக்பாலின் குடும்பத்தினர் போலீசாருக்கு தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.