நண்பரின் இறுதிச்சடங்கு நிகழ்வில் தன் உயிரை மாய்த்துக்கொண்ட நபர்..! அதிர்ச்சி சம்பவம்


நண்பரின் இறுதிச்சடங்கு நிகழ்வில் தன் உயிரை மாய்த்துக்கொண்ட நபர்..! அதிர்ச்சி சம்பவம்
x

கோப்புப்படம் 

மேல் சிகிச்சைக்காக ஆக்ராவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே ஆனந்த் உயிரிழந்தார்.

லக்னோ,

உத்தரப் பிரதசேத்தில் பிரோசாபாத் மாவட்டத்தில் உள்ள நாக்லா கங்கர் காவல் நிலையப் பகுதியை சேர்ந்தவர் அசோக் (42). புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர், சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார்.

இதனை தொடர்ந்து, அசோக்கின் இறுதிச் சடங்குகள் நேற்று காலை 11 மணியளவில் யமுனைக் கரையில் நடைபெற்றன. இறுதியாக, அசோக்கின் சிதைக்கு தீ மூட்டிவிட்டு அங்கிருந்தவர்கள் சிறுது நேரத்தில் வெளியேறத் தொடங்கினர்.

அப்போது, அங்கு நின்றுக் கொண்டிருந்த அசோக்கின் நெருங்கிய நண்பரான ஆனந்த் என்பவர் திடீரென, எரிந்துக் கொண்டிருந்த சிதை மீது விழுந்து தற்கொலைக்கு முயன்றார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள், பலத்த காயமடைந்த ஆனந்தை மீட்டு மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்னர்.

அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆக்ராவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். ஆனால் ஆனந்த் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், ஆனந்தின் குடும்ப உறுப்பினர்களை தொடர்பு கொள்ளும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story