காதலர் தினத்தை பசு காதல் தினமாக கொண்டாடிய உத்தரபிரதேச மந்திரி


காதலர் தினத்தை பசு காதல் தினமாக கொண்டாடிய உத்தரபிரதேச மந்திரி
x

கோப்புப்படம்

காதலர் தினத்தை உத்தரபிரதேச மந்திரி பசு காதல் தினமாக கொண்டாடினார்.

லக்னோ,

உலக அளவில் காதலர் தினம் கொண்டாடப்படும் பிப்ரவரி 14-ந் தேதியை பசு அணைப்பு தினமாக கொண்டாட வேண்டுமென இந்திய விலங்குகள் நல வாரியம் அறிவித்தது. எனினும் இது சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியதை தொடர்ந்து, இந்திய விலங்குகள் நல வாரியம் தனது அறிவிப்பை திரும்பப்பெற்றது.

இந்த நிலையில் நேற்று உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்ட நிலையில் உத்தரபிரதேசத்தின் கால்நடை பராமரிப்புத்துறை மந்திரி தர்மபால் சிங் நேற்றைய தினத்தை பசு காதல் தினமாக கொண்டாடினார். பசுக்களுக்கு வெல்லம், ரொட்டி போன்றவற்றை வழங்கி பசு காதல் தினத்தை கொண்டாடிய அவர், பசுக்களை நமது தாயாக கருத வேண்டும் என வலியுறுத்தினார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "நமக்கு 3 தாய்கள் உள்ளனர். முதலில் நம்மைப் பெற்றெடுக்கும் நமது தாய், 2-வது பசு தாய், 3-வது பாரத தாய். முதல் அன்பு நம் தாய் மீது இருக்க வேண்டும். பிறகு பசு தாய் மற்றும் பாரத தாய்க்கு நமது மரியாதையை செலுத்த வேண்டும். பசுவின் சாணம் மற்றும் சிறுநீரை விட உலகில் சிறந்தது எதுவும் இல்லை. என்னை போலவே அனைத்து மக்களும் காதலர் தினத்தை பசு காதல் தினமாக கொண்டாட வேண்டும்" என கூறினார்.


Next Story