தாயுடன் தகாத உறவில் இருந்த நபரை அடித்துக்கொன்ற மகன்


தாயுடன் தகாத உறவில் இருந்த நபரை அடித்துக்கொன்ற மகன்
x
தினத்தந்தி 22 July 2023 5:37 PM IST (Updated: 22 July 2023 6:08 PM IST)
t-max-icont-min-icon

தாயுடன் தகாத உறவில் இருந்த நபரை மகன் அடித்துக்கொன்றான்.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் பரபேங்கி மாவட்டம் சுபிஹா பகுதியை சேர்ந்த இளைஞர் அஷ்பக் (வயது 24). இவரது தாயாருக்கும் அதே பகுதியை சேர்ந்த அவ்ஷப் ஹசன் (வயது 50) என்பவருக்கும் இடையே தகாத உறவு இருந்துள்ளது. இதற்கு அஷ்பக் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நேற்று இரவு அஷ்பகின் தாயை பார்க்க ஹசன் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் இருந்த அஷ்பகின் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர், வீட்டில் இருந்த கோடாரியால் ஹசனை அஷ்பகின் தாக்கினார்.

பின்னர், ஹசனை வீட்டிற்கு வெளியே உள்ள சாலைக்கு இழுத்து வந்து அங்கு வைத்தும் கடுமையாக தாக்கியுள்ளார். இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் விரைந்து சென்று படுகாயங்களுடன் சாலையில் கிடந்த ஹசனை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமத்தனர். ஆனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஹசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து கொலைவழக்குப்பதிவு செய்த போலீசார் அஷ்பக்கை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story