உ.பி: ஏழை குழந்தைகளுக்கு இலவசமாக கல்வி கற்பிக்கும் போலீஸ் அதிகாரி - பலர் பாராட்டு


உ.பி: ஏழை குழந்தைகளுக்கு இலவசமாக கல்வி கற்பிக்கும் போலீஸ் அதிகாரி - பலர் பாராட்டு
x

உத்தரபிரதேசத்தில் பணியாற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஞ்சித், ஏழைக் குழந்தைகளுக்கு இலவசமாக கல்வி கற்பித்து வருகிறார்.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியாவில் பணியாற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஞ்சித் என்பவர் அந்த பகுதியில் பிச்சை எடுக்கும் குடும்பங்களில் உள்ள ஏழை குழந்தைகளுக்கு இலவசமாக கல்வி கற்பிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

இது குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஞ்சித் கூறுகையில், நான் இந்த பகுதியில் சொந்தமாக பள்ளியை தொடங்கி, எனக்கு விடுமுறை கிடைக்கும் நேரங்களில் குழந்தைகளுக்கு கல்வி கற்பித்து வருகிறேன். இங்கு படிக்கும் குழந்தைகளின் பெற்றோர் பிச்சை எடுப்பதை நான் அடிக்கடி நேரில் பார்த்தேன். அவர்களின் குழந்தைகளுக்கு கல்வி கற்றுக்கொடுப்பது தொடர்பாக அவர்களிடம் பேசினேன். அதில் பலர் தங்கள் குழந்தைகளுக்கு கல்வி கற்க ஆர்வமாக இருந்தனர்.

நாங்கள் இங்கு படித்து முடித்து விட்டு, பள்ளிக்கு சென்று படிக்க விரும்புகிறோம். மேலும், இங்கு படிக்கும் போது நாங்கள் நன்றாக கல்வி கற்பதாக உணர்கிறோம், எனவே நாங்கள் தவறாமல் இங்கு படிக்க வருகிறோம் என மாணவர்கள் தெரிவித்தனர்.

ஏழைக் குழந்தைகளுக்கு இலவசமாக கல்வி கற்பித்து வரும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஞ்சித்தின் செயலை பலர் பாராட்டி வருகின்றனர்.


Next Story