பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி தற்கொலை செய்துகொண்டதால் அதிர்ச்சி.!


பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி தற்கொலை செய்துகொண்டதால் அதிர்ச்சி.!
x
தினத்தந்தி 15 Nov 2023 1:27 AM IST (Updated: 15 Nov 2023 6:37 AM IST)
t-max-icont-min-icon

வழக்கை வாபஸ் பெறுமாறு குற்றம் சாட்டப்பட்டவர் வற்புறுத்தியதால், சிறுமி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

முசார்பர்,

உத்தரபிரதேச மாநிலம் முசார்பர் நகரில் 16 வயது சிறுமி, தாலிப் என்ற நபரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இது தொடர்பாக, தன் மீது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை வாபஸ் பெறுமாறு தாலிப் வற்புறுத்தியதால், சிறுமி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஜின்ஜானா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிராமம் ஒன்றில் இந்த சம்பவம் நடந்துள்ளது. தனது மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக சிறுமியின் தந்தை கொடுத்த புகார் அடிப்படையில் போலீசார், வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் குற்றவாளிக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது

புதிய புகாரின் அடிப்படையில், தாலிப் மீது தற்கொலைக்கு தூண்டிய குற்றச்சாட்டின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.


Next Story