தலைமை ஆசிரியர், ஆசிரியர்களை வகுப்பறையில் வைத்து பூட்டிய மாணவர்கள் - காரணம் என்ன?


தலைமை ஆசிரியர், ஆசிரியர்களை வகுப்பறையில் வைத்து பூட்டிய மாணவர்கள் - காரணம் என்ன?
x

மதிய உணவுக்குப் பதிலாக வழங்க வேண்டிய பணம் வழங்காததால் ஆசிரியர்களை, மாணவர்கள் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பல்லியா,

உத்தரப் பிரதேசத்தில் மதிய உணவுக்குப் பதிலாக வழங்கப்பட வேண்டிய பணத்தொகை வழங்கப்படாததால் மாணவர்கள் ஆசிரியர்களை பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் பல்லியாவில் உள்ள ஒரு பள்ளியில் கொரோனா காலகட்டத்தின் போது மதிய உணவுக்குப் பதிலாக வழங்கப்பட வேண்டிய உணவு பாதுகாப்பு உதவித்தொகை வழங்கப்படவில்லை என்று அனைத்து ஆசிரியர்களையும் தலைமை ஆசிரியரையும் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இது தொடர்பாக மாணவர்கள், பள்ளி தலைமை ஆசிரியரை பலமுறை தொடர்பு கொண்டும் பலனில்லாததால், கடைசி முயற்சியாக ஆசிரியர்களை அடைத்து வைத்ததாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தலைமை ஆசிரியர் ஜெயபிரகாஷ் கூறும்போது, இந்த சம்பவம் குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளேன். அனைத்து ஆசிரியர்களும் ஒரு அறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கிராமத் தலைவரின் வேண்டுகோளின் பேரில் மாணவர்கள் ஆசிரியர்களை செல்ல அனுமதித்தனர் என்று கூறினார்.



Next Story