"3-வதும் பெண் குழந்தையா" நடு ரோட்டில் வைத்து பெண் மீது கணவன்- மாமியார் தாக்குதல்...!
ஆண் குழந்தை பெற்றெடுக்கவில்லை என கூறி எனது கணவர் மற்றும் மாமியார் வீட்டை சேர்ந்தவர்கள் என்னை தொடர்ந்து துன்புறுத்தி வந்தனர் என பெண் கூறி உள்ளார்.
லக்னோ
உத்திர பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த மஹோபா மாவட்டத்தைச் சேர்ந்த பெண் குஸ்மாவை அவரது கணவர் நீரஜ் பிரஜாப்தி. இந்த தம்பதிகளுக்கு இந்த தம்பதிக்கு ப்ரான்ஷி என்ற 7 வயதிலும், ஆர்த்தி என்ற 2 வயதிலும் பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். முன்றாவதாக குஸ்மா கர்ப்பம் தரித்து உள்ளார். இந்த முறை அவரது குடும்பத்தினர் ஆண் குழந்தை பிறக்கும் என நம்பி இருந்தனர். ஆனால் 3வதும் பெண் குழந்தைகளை பிறந்தது. இதனல் கணவர் மற்ரு மாமியார் அவரை தாக்கி உள்ளனர்.
நீரஜ், அவரது பெற்றோர், அவரது சகோதரர் என எல்லாரும் ஒன்றாக சேர்ந்து மறுபடியும் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டனர்.. நடுரோட்டில் குஸ்மாவை கட்டிப்போட்டு அடித்துள்ளனர். பெரிய பெரிய கற்களை கொண்டு தாக்கி உள்ளனர்.. கீழே கிடந்த தடித்த குச்சிகளை வைத்து அடித்திருக்கிறார்கள். இதனால் நிலைக்குலைந்து ரத்தவெள்ளத்தில் சரிந்து விழுந்தார் குஸ்மா.
"ஆண் குழந்தை பெற்றெடுக்கவில்லை என கூறி எனது கணவர் மற்றும் மாமியார் வீட்டை சேர்ந்தவர்கள் என்னை தொடர்ந்து துன்புறுத்தி வந்தனர். இரண்டாவது குழந்தையும் பெண்ணாக பிறந்ததை அடுத்து என்னை அதிகளவு துன்புறுத்தி வந்தனர்," என்று பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்தார்.
பெண் குழந்தை பிறந்ததால், என் கணவர் குடும்பத்தினர் பலமுறை எனக்கு உணவு கொடுக்காமல் பட்டினி கிடக்க வைத்தனர். இதன் காரணமாக நான் கூலி வேலைக்கு போக ஆரம்பித்தேன் என்று அந்த பெண் மேலும் தெரிவித்தார்.
பெண்ணை குடும்பத்தார் சேர்ந்து கொண்டு தாக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. வீடியோ காட்சிகளின் படி இரண்டு பெண்கள் சேர்ந்து கொண்டு குழந்தை பெற்றெடுத்த பெண்ணை திட்டி, எட்டி மிதித்து, கைகளால் குத்துகின்றனர். மேலும் அடி வாங்கும் பெண் கதறி அழுது, உதவி கேட்கிறார்.
இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
"தாக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். நாங்கள் இந்த விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து இருக்கிறோம். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்," என்று மஹோபா காவல் துறையை சேர்ந்த சுதா சிங் தெரிவித்தார்.