உத்தரப்பிரதேசத்தில் மின்னல் தாக்கி வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் தாய், மகன் பலி
உத்தரப்பிரதேசத்தில் மின்னல் தாக்கியதில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து தாய், மகன் உயிரிழந்தனர்.
முசாபர்நகர்,
உத்தரப்பிரதேசத்தில் மின்னல் தாக்கியதில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து தாய், மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முசாபர்நகர் மாவட்டம் துல்ஹெடி கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
நேற்று இரவு மின்னல் தாக்கியதில் மேற்கூரை இடிந்து விழுந்து அங்கூரி தேவி (வயது 55) மற்றும் அவரது மகன் முன்னா (வயது 30) இருவரும் உயிரிழந்தனர்.
மின்னலால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து மதிப்பிட வருவாய்த் துறையின் குழு அனுப்பப்பட்டுள்ளதாக சப்-டிவிஷனல் மாஜிஸ்திரேட் அபிஷேக் குமார் தெரிவித்தார். மேலும், இயற்கை பேரிடரில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story