மனைவி பெற்றோர் வீட்டில் இருந்து திரும்பாததால் மனமுடைந்த கணவன்...அடுத்து நடந்த விபரீதம்
பெற்றோர் வீட்டில் இருந்து மனைவி திரும்பாததால் மனமுடைந்த அந்த நபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் பல்லியா மாவட்டம் மணியார் நகரில் உள்ள சர்வார் ககர்கட்டியில் வசித்து வந்த அலோக் ராஜாக் (வயது 28). இவரது மனைவி அவரது பெற்றோர் வீட்டில் நீண்ட காலமாக தங்கியிருந்ததால் மனமுடைந்த அலோக் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அலோக் வீட்டில் இருந்து வெகு நேரமாக வெளியே வராததால் அக்கம் பக்கத்தினர் கதவை தட்டியுள்ளனர். ஆனால் கதவு திறக்கப்படாததால் சந்தேகித்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், அலோக்கின் உடலை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து மணியார் காவல் நிலைய பொறுப்பாளர் ரத்னேஷ் துபே கூறுகையில், "பெற்றோர் வீட்டில் இருந்து மனைவி திரும்பாததால் மனமுடைந்த அந்த நபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் பற்றிய தகவல் கிடைத்ததும், நாங்கள் அந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளோம். மேலும் இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது" என்றார்.