அரைகுறை ஆடை அணிவதால் வாடகைக்கு வீடு கிடைக்காமல் கவர்ச்சி நடிகை அவதி


அரைகுறை ஆடை அணிவதால் வாடகைக்கு வீடு கிடைக்காமல் கவர்ச்சி நடிகை அவதி
x

உர்பி ஜாவேத் தனது அரைகுறை ஆடைகளை முஸ்லிம்கள் மற்றும் இந்துக்கள் இருவரும் விரும்பாததால் மும்பையில் வாடகைக்கு வீட்டு தேட போராடி வருகிறார்.

மும்பை

உர்பி ஜாவேத் தனது அரை குறை ஆடைகளால் சமூக ஊடகங்களில் அடிக்கடி பரபரப்பை ஏற்படுத்துவார். உர்பி ஜாவேத் ஒரு நடிகை மற்றும் மாடல் மட்டுமல்ல, ராப் பாடகரும் கூட. உர்பிக்கு மற்றொரு பெரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது.இந்த ஆண்டு அதிகம் தேடப்பட்ட ஆசிய பிரபலமாக உர்பி ஜாவேத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கத்ரீனா கைப், அஜய் தேவ்கன், ராம் சரண், கஜோல் மற்றும் ஆலியா பட் போன்ற பிரபலங்களுடன் உர்பி ஜாவேத் இந்த பட்டியலில் இடம் பிடித்து உள்ளார். உலகளவில் இணையத்தில் அதிகம் தேடப்பட்ட 100 ஆசிய பிரபலங்கள் பட்டியலில் நடிகை இடம்பெற்றுள்ளார்.

உர்பி ஜாவேத் தனது அரைகுறை ஆடைகளை முஸ்லிம்கள் மற்றும் இந்துக்கள் இருவரும் விரும்பாததால் மும்பையில் வாடகைக்கு வீட்டு தேட போராடி வருகிறார்.

அவர் அரை குறை ஆடை உடை உடுத்துவது பிடிக்காததால் முஸ்லிம்கள் அவருக்கு வீடு கொடுப்பதில்லை. மும்பையில் தனக்கு வீடு வாடகைக்கு விட யாரும் தயாராக இல்லை. நான் முஸ்லீம் என்பதால் இந்துக்களும் எனக்கு வீடு கொடுப்பதில்லை என்று கூறுகிறார். இன்னும் சிலருக்கு அரசியல் பிரச்சனை என்றும் உர்பி தெளிவுபடுத்தினார்.

இது குறித்து உர்பி தனது வேதனையை டுவிட்டரில் பதிவிட்டார். "நான் உடை அணிவதால் முஸ்லிம் உரிமையாளர்கள் எனக்கு வீட்டை வாடகைக்கு விட விரும்பவில்லை, நான் முஸ்லீம் என்பதால் இந்து உரிமையாளர்கள் என்னை வாடகைக்கு விட விரும்பவில்லை. சில உரிமையாளர்களுக்கு அரசியல் அச்சுறுத்தல்களால் சிக்கல் உள்ளது. மும்பையில் வாடகை குடியிருப்பைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினமானது," என்று அவர் கூறி உள்ளார்.

சிறிது நேரத்தில், அவரது டுவீட் வைரலானது அவருக்கு பலர் அனுதாபம் தெரிவித்து உள்ளனர். சிலர் மும்பையில் தங்குவதற்கு ஒழுங்காக உடை அணியுமாறு அறிவுரை கூறி உள்ளனர்.
Next Story