பிரதமர் மோடியுடன் அமெரிக்க வர்த்தக மந்திரி சந்திப்பு


பிரதமர் மோடியுடன் அமெரிக்க வர்த்தக மந்திரி சந்திப்பு
x

பிரதமர் மோடியை அமெரிக்க வர்த்தக மந்திரி நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

புதுடெல்லி,

அமெரிக்க வர்த்தக மந்திரி ஜினா ரைமண்டோ 4 நாள் பயணமாக இந்தியா வந்திருந்தார். அவர் நேற்று முன்தினம் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.

இது குறித்து பிரதமர் அலுவலகம் நேற்று டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், "அமெரிக்க வர்த்தக மந்திரி ஜினா ரைமண்டோவுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று பயனுள்ள ஒரு பேச்சுவார்த்தையை நடத்தினார்" என கூறப்பட்டுள்ளது.

முன்னதாக ஜினா ரைமண்டோ டெல்லியில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார். இருவரும் 'ஜி-20' உச்சி மாநாட்டின் முன்னுரிமைகள், இருதரப்பு முதலீடு, வர்த்தகத்தை மேம்படுத்துவதில் ஒத்துழைப்பை அதிகரிப்பது பற்றி விவாதித்தனர். அதை தொடர்ந்து வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயலையும் சந்தித்தார்.

1 More update

Next Story