நுபுர் சர்மாவின் சர்ச்சை பேச்சு : அமெரிக்கா விமர்சனம் ;


நுபுர் சர்மாவின் சர்ச்சை பேச்சு : அமெரிக்கா விமர்சனம் ;
x
தினத்தந்தி 17 Jun 2022 11:04 AM IST (Updated: 17 Jun 2022 11:15 AM IST)
t-max-icont-min-icon

நுபுர் சர்மாவின் அறிக்கையால் கோபமடைந்த அமெரிக்கா, ரஷியாவிற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு பிடன் பழிவாங்கும் முயற்சி எடுக்கிறார்.

புதுடெல்லி

இஸ்லாமியர்களின் இறை தூதர் நபிகள் நாயகம் குறித்து பா.ஜ.க. செய்தி தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மாவும், நவீன் ஜிண்டாலும் ஆட்சேபகரமான கருத்துகளை வெளியிட்டு, அது பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக அவர்களை கைது செய்ய வலியுறுத்தி கடந்த வெள்ளிக்கிழமை நாட்டின் பல இடங்களில் முஸ்லிம்கள் போராட்டம் நடத்தினர். நுபுர் சர்மாவுக்கு எதிராக பல்வேறு இடங்களில் புகாரும் கொடுக்கப்பட்டுள்ளது.

முஸ்லீம் நாடுகளும் தங்கள் கண்டனத்தை தெரிவித்து உள்ள நிலையில் தற்போது அமெரிக்காவும் விமர்சனம் தெரிவித்து உள்ளது.நுபுர் சர்மாவின் ஆக்ரோஷமான அறிக்கைக்கு கண்டனம் தெரிவிப்பதாக கூறியுள்ளது. அந்த அறிக்கைகளுக்கு பாஜக தலைமை பகிரங்கமாக கண்டனம் தெரிவிப்பது நல்லது என்று அமெரிக்கா கூறி உள்ளது.

அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ், மனித உரிமைகள் விவகாரத்தில் தனது அரசாங்கம் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறினார்.

மேலும் அவர் கூறும் போது

மனித உரிமைகள் குறித்த கவலைகள் குறித்து இந்திய அரசின் மூத்த தலைவர்களுடன் அமெரிக்கா தொடர்ந்து பேசிவருகிறது. மதம் அல்லது நம்பிக்கையை வெளிப்படுத்தும் சுதந்திரம் இதில் அடங்கும். மனித உரிமைகளை மதிக்க இந்தியாவை நாங்கள் ஊக்குவிக்கிறோம் என கூறி உள்ளார்.

அமெரிக்க வெளியுறவுத்துறை 2021 இந்தியா குறித்த மனித உரிமைகள் அறிக்கையில் தன்னிச்சையான கைதுகள், காவலில் வைக்கப்பட்ட மரணங்கள், சிறுபான்மையினருக்கு எதிரான மத வன்முறை, கருத்து சுதந்திரம், ஊடகங்கள் மீதான கட்டுப்பாடுகள், பத்திரிகையாளர்கள் மீதான வழக்குகள் மற்றும் பல கட்டுப்பாடுகள் கொண்ட சட்டங்கள் குறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியது.

ஆனால் அமெரிக்காவில் கறுப்பர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினருக்கு எதிரான வன்முறைகளில் மவுனம் காக்கும் அமெரிக்கா, நுபுர் சர்மாவுடன் மனித உரிமைகள் விவகாரத்தில் இந்தியாவுக்கு அறிவுரை வழங்கி உள்ளது.

இதுகுறித்து அரசியல் என்று நிபுணர்கள் கூறும்போது

இந்தியாவுக்கும் வளைகுடா முஸ்லீம் நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள விரிசலை அமெரிக்காவும் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறது. ரஷியா தொடர்பாக இந்தியா மீதான அழுத்தத்தை அதிகரிப்பதே அமெரிக்காவின் முயற்சியாக இருக்கலாம்.

உண்மையில், அமெரிக்காவின் பிடன் நிர்வாகம் இந்தியாவின் ரஷியா கொள்கையில் மகிழ்ச்சியடையவில்லை. இந்த காரணத்திற்காக, அவர் சில நேரங்களில் வெளிப்படையான அச்சுறுத்தல்களைக் கொடுத்தும், சில சமயங்களில் மனித உரிமைகள் சாக்காகவும் இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிக்கிறார். பல அமெரிக்க அதிகாரிகள் வெளிப்படையாக இந்தியாவை மிரட்டுகின்றனர் என கூறினர்.


Next Story