உத்தரபிரதேசம்: பள்ளிப் பேருந்திலிருந்து மீட்கப்பட்ட மலைப்பாம்பு..!


உத்தரபிரதேசம்: பள்ளிப் பேருந்திலிருந்து மீட்கப்பட்ட மலைப்பாம்பு..!
x

உத்தரபிரதேசத்தில் ரேபரேலி பகுதியில் தனியார் பள்ளி வாகனத்தில் இருந்த மலைப்பாம்பை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

ரேபரேலி,

உத்தரபிரதேசத்தின் ரேபரேலி பகுதியில் தனியார் பள்ளி வளாகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனத்தின் இருக்கைக்கு அடியில் மலைப்பாம்பு ஒன்று மறைந்து இருந்துள்ளது.

இது குறித்து தகவல் அறிந்து வந்த அதிகாரிகள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், ஒரு மணி நேரம் போராடி மலைப்பாம்பை பத்திரமாக மீட்டனர்.

பள்ளி வாகனத்தில் இருந்த மலைப்பாம்பை வனத்துறையினர் மீட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், மீட்கப்பட்ட மலைப்பாம்பு சுமார் 11.5 அடி நீளமும், 80 கிலோ எடையும் கொண்டது. ஒரு மணிநேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்ட மலைப்பாம்பு, டல்மாவ் வனப்பகுதியில் விடப்பட்டதாக தெரிவித்தார்.

பள்ளி வாகனத்தின் அருகில் ஆடுகளை பிடிக்க மலைப்பாம்பு வந்ததாகவும், மலைப்பாம்பை பார்த்த மக்கள் கூச்சலிட்டதால் வாகனத்திற்குள் சென்று மறைந்து கொண்டதாகவும் அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.



Next Story