உத்தரப்பிரதேசம்: டீசல் திருட்டை தடுக்க முயன்ற பெட்ரோல் பங்க் மேனேஜர் சுட்டுக்கொலை..!


உத்தரப்பிரதேசம்: டீசல் திருட்டை தடுக்க முயன்ற பெட்ரோல் பங்க் மேனேஜர் சுட்டுக்கொலை..!
x

கோப்புப்படம்

உத்தரப்பிரதேசத்தில் டீசல் திருட்டை தடுக்க முயன்ற பெட்ரோல் பங்க் மேனேஜர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

பரெய்லி

உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோ-டெல்லி தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டிருந்த டிரக் ஒன்றிலிருந்து டீசல் திருடியவர்களை தடுக்க முயன்றபோது பெட்ரோல் பங்க் மேனேஜர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

பெட்ரோல் பங்க் மேனேஜர் சுஷில் குமார், தன்னுடைய இரண்டு சக ஊழியர்களுடன் பெட்ரோல் பங்கில் பணியிலிருந்த போது, சில நபர்கள் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த டிரக்கைச் சுற்றி வந்துள்ளனர். அவர்களுடைய சந்தேகத்திற்குரிய நடவடிக்கைகளை கண்டு அவர்களை கண்காணித்த போது அவர்கள் டிரக்கிலிருந்து டீசல் திருடுவதை கண்டுபிடித்தனர்.

மேனேஜர் சுஷில் குமார் மற்றும் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் அவர்களை தடுக்க முயன்றுள்ளனர். இதையடுத்து அவர்கள் மீது அந்த நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் மேனேஜர் சுஷில் குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து பரெய்லி கிராமப்புற எஸ்.பி ராஜ் குமார் கூறுகையில், இதுகுறித்து விசாரிக்க தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்றும் கூறினார்.


Next Story