உத்தரகாண்ட்: ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட கார்- 9 பேர் பலி..! ஒருவர் உயிருடன் மீட்பு
உத்தரகாண்ட் மாநிலம் தேலா ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட காரில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர்.
டேராடூன்,
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா பகுதியைச் சேர்ந்த 10 பேர் உத்தரகாண்ட் மாநிலத்திற்கு சுற்றுலா சென்றனர். இவர்கள், இன்று காலை 5.45 மணியளவில் ராம்நகரில் உள்ள ரிசார்ட்டில் தங்கிவிட்டு, தேலா ஆற்றின் வழியே காரில் சென்றுக் கொண்டிருந்தனர்.
அப்போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மாநிலத்தில் பெய்த கனமழை காரனமாக ஆற்றில் நீர்வரத்து அதிகமாக இருந்துது. இதனால், கார் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டது. இதில், காரில் இருந்த 10 பேரில் 9 பேர் உயிரிழந்தனர்.
ஒருவர் பலத்த காயமடைந்து ராம்நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இறந்தவர்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். சம்பவ இடத்தில், உள்ளூர் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் உள்ளனர். கிரேன் மூலம் ஆற்றில் இருந்து கார் வெளியே எடுக்கப்பட்டது.
உயிரிந்தவர்களில் 3 இளைஞர்கள், 6 பெண்கள் ஆவர். இந்த விபத்து குறித்து வழக்கப்பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.