ஹெலிகாப்டர் முன் செல்பி எடுக்க முயன்ற அரசு அதிகாரி; இறக்கை வெட்டி சம்பவ இடத்திலேயே பலி


ஹெலிகாப்டர் முன் செல்பி எடுக்க முயன்ற அரசு அதிகாரி; இறக்கை வெட்டி சம்பவ இடத்திலேயே பலி
x

விமான போக்குவரத்து துறையில் நிதிப்பிரிவில் பணியாற்றி வந்த அதிகாரி செல்பி எடுக்க முயன்றுள்ளார்.

டெராடூன்,

உத்தரகாண்ட் மாநிலம் சிவில் விமானப்போக்குவரத்து துறையில் நிதிப்பிரிவில் பணியாற்றி வரும் அதிகாரி ஜிதேந்திர குமார் சைனி.

இவர் இன்று அதிகாரிகளுடன் ஹெலிகாப்டரில் கேதார்நாத் சென்றுள்ளார். கேதார்நாத் சென்ற உடன் ஹெலிகாப்டர் முன் நின்று செல்பி புகைப்படம் எடுக்க முயன்றுள்ளார்.

ஹெலிகாப்டரின் கூர்மையான் இறக்கைகள் முழுவதும் நிற்காமல் சுற்றிக்கொண்டிருந்தனர். அப்போது செல்பி எடுக்க முயன்ற ஜிதேந்திர குமார் சைனியை ஹெலிகாப்டரின் கூர்மையான இறக்கைகள் வெட்டியது.

இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் ஜிதேந்திர குமார் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story