உத்தரகாண்ட் சுரங்க விபத்து: 3 அடி அகல குழாய் மூலம் 40 தொழிலாளர்களை மீட்க திட்டம்


உத்தரகாண்ட் சுரங்க விபத்து: 3 அடி அகல குழாய் மூலம் 40 தொழிலாளர்களை மீட்க திட்டம்
x

Image Courtesy : ANI

தினத்தந்தி 17 Nov 2023 6:51 AM IST (Updated: 17 Nov 2023 11:33 AM IST)
t-max-icont-min-icon

நவீன இயந்திரங்களின் உதவியுடன் தொழிலாளர்களை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

டேராடூன்,

உத்தரகாண்ட் மாநிலம் யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கம் தோண்டும் பணியின்போது விபத்து ஏற்பட்டது. 4.5 கி.மீ. நீளமுள்ள இந்த சுரங்கப் பாதையில் 200 மீட்டர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. சுரங்கப்பாதை இடிந்து விழுந்ததில் 40 தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக் கொண்டனர்.

அவர்களை மீட்கும் பணி 5 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சுரங்கத்திற்குள் சிக்கியுள்ள 40 தொழிலாளர்களுக்கும் தேவையான உணவு, தண்ணீர் மற்றும் மருந்துகள் ஆகியவை வழங்கப்பட்டு வருவதாக மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

இடிபாடு நிகழ்ந்த இடத்தில் மேலும் ஒரு நிலச்சரிவு ஏற்பட்டதால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டது. இருப்பினும் நவீன இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் உதவியுடன் உள்ளே சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சுரங்க இடிபாடுகள் வழியாக துளையிட்டு சுமார் 3 அடி அகலம் கொண்ட குழாயை உள்ளே செலுத்தி அதன் மூலம் தொழிலாளர்கள் 40 பேரையும் வெளியேற்ற மீட்புப் படையினர் திட்டமிட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் யாரேனும் இருந்தால் அவர்களை ஸ்ட்ரெச்சர் மூலம் மீட்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த 12 முதல் 15 மணி நேரத்திற்குள் தொழிலாளர்கள் மீட்கப்படுவார்கள் என தேசிய பேரிடர் மீட்புப் படை தலைவர் அதுல் கர்வால் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story