ஜம்மு: மோசமான வானிலையால் வைஷ்ணவி தேவி கோயிலுக்கு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்! பக்தர்கள் மகிழ்ச்சி


ஜம்மு: மோசமான வானிலையால் வைஷ்ணவி தேவி கோயிலுக்கு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்! பக்தர்கள் மகிழ்ச்சி
x

கனமழையால் ஜம்முவில் உள்ள வைஷ்ணவி தேவி கோயிலுக்கு செல்லும் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.

ஸ்ரீநகர்,

ஜம்முவில் இருந்து 50 கி.மீ. தொலைவில் திரிகுடா மலை உச்சியில் உள்ள வைஷ்ணவி தேவி கோயிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில், ரியாசி மாவட்டத்தில் பெய்த கனமழையால் வைஷ்ணவி தேவி கோயிலுக்கு செல்லும் யாத்திரை நேற்று மாலை முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.

எனினும், இன்று காலை முதல் வழக்கம்போல, பக்தர்கள் வைஷ்ணவி தேவி கோவிலுக்கு பயணத்தை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலீஸ் மற்றும் சி ஆர் பி எப் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அங்குள்ள நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Next Story