என்ஜினில் அதிர்வு: இண்டிகோ விமானம் ஜெய்ப்பூரில் அவசரமாக தரையிறக்கம்


என்ஜினில் அதிர்வு: இண்டிகோ விமானம் ஜெய்ப்பூரில் அவசரமாக தரையிறக்கம்
x

என்ஜினில் அதிர்வு ஏற்பட்டதால் இண்டிகோ விமானம் ஜெய்ப்பூரில் அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது.

ஜெய்ப்பூர்,

டெல்லியில் இருந்து வதோதராவுக்கு புறப்பட்ட இண்டிகோ விமான ஜெய்ப்பூரில் அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது. விமானத்தின் என்ஜினில் அதிர்வு ஏற்பட்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.

விமானத்தில் இருந்த பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். என்ஜின் அதிர்வு குறித்து பொறியியல் குழு ஆய்வு மேற்கொண்டு வருகிறது. விமானம் தரையிறக்கம் குறித்து விமான போக்குவரத்து இயக்குனரகம் விசாரணை நடத்தி வருகிறது.

1 More update

Next Story