வேகமாக வந்த லாரியில் காண்டாமிருகம் மோதும் காட்சி: டுவிட்டரில் வீடியோவை பகிர்ந்து எச்சரிக்கை விடுத்த அசாம் முதல்-மந்திரி


வேகமாக வந்த லாரியில் காண்டாமிருகம் மோதும் காட்சி: டுவிட்டரில் வீடியோவை பகிர்ந்து எச்சரிக்கை விடுத்த அசாம் முதல்-மந்திரி
x

காண்டாமிருகம் ஒன்று லாரியில் மோதும் காட்சியை அசாம் முதல்-மந்திரி டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

கவுகாத்தி,

காண்டாமிருகம் ஒன்று லாரியில் மோதும் காட்சியை வீடியோவாக அசாம் முதல் மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

துப்ரி மாவட்டத்தில் உள்ள ஹல்திபாரி என்ற இடத்தில் காண்டாமிருகம் ஒன்று வேகமாக வந்த லாரி மீது மோதியது.

அந்த வீடியோவில் ஒரு காண்டாமிருகம் வனப்பகுதியிலிருந்து வெளியேறி சாலையில் சுற்றி திரிந்தது. அப்போது லாரியில் மோதி தாக்கப்பட்ட பிறகு, அந்த காண்டாமிருகம் எழுந்து நின்றது, பின் மீண்டும் கீழே விழுந்தது, அதன்பின் மீண்டும் காட்டுக்குள் ஓடியது.

இது பற்றி அவர் கூறுகையில், "காண்டாமிருகங்கள் நமது சிறப்பு நண்பர்கள்; ஆகவே காண்டாமிருகங்களின் இடத்தில் யாரும் எல்லை மீறுவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் காண்டாமிருகம் உயிர் பிழைத்தது. அந்த வாகனம் கண்டுபிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. காசிரங்காவில் விலங்குகளை காப்பாற்ற 32-கிமீ உயரமான தாழ்வாரம் அமைப்பது குறித்து செயலாற்றி வருகிறோம்" என்று பதிவிட்டார்.


Next Story