பெண்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்திய போலீசார் - உ.பி.யில் அதிர்ச்சி சம்பவம்


பெண்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்திய போலீசார் - உ.பி.யில் அதிர்ச்சி சம்பவம்
x

அம்பேத்கார் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் அம்பேத்கர் நகர் மாவட்டம் ஜலால்பூர் பகுதியில் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது.

இந்நிலையில் அந்த அம்பேத்கர் சிலை மர்மநபர்களால் இன்று உடைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கண்டித்து அப்பகுதி மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, ஆர்ப்பாட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் கலைந்து செல்லும்படி கூறினர். இதனால், பொதுமக்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது திடீரென பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், போராட்டக்காரர்கள் போலீசார் மீது கற்கலை வீசி தாக்குதல் நடத்தினர்.

இதையடுத்து, போலீசாரும் லத்தி தாக்குதல் நடத்தினர். அதில், போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது சரமாரியாக தாக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆபாச வார்த்தைகளால் திட்டி போலீசார் தாக்கியதில் ஒரு பெண் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழும் நிகழ்வும் அரங்கேறியுள்ளது. போராட்டக்காரர்களும் கற்கலை கொண்டு தாக்குதல் நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு மற்றும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.



Next Story