டெல்லி துணைநிலை ஆளுநராக வினய் குமார் சக்சேனா பொறுப்பேற்பு


டெல்லி துணைநிலை ஆளுநராக வினய் குமார் சக்சேனா பொறுப்பேற்பு
x
தினத்தந்தி 26 May 2022 12:20 PM GMT (Updated: 26 May 2022 12:56 PM GMT)

டெல்லியின் துணை நிலை ஆளுநராக வினய் குமார் சக்சேனா பதவியேற்றுக்கொண்டார்

புதுடெல்லி ,

டெல்லி துணை நிலை ஆளுநராக வினய் குமார் சக்சேனா பதவியேற்றார். டெல்லியின் துணை நிலை ஆளுநராக இருந்த அணில் பைஜால் கடந்த வாரம் பதவியை ராஜினாமா செய்தார் .இதனை தொடர்ந்து துணை நிலை ஆளுநராக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி மற்றும் காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் தலைவராக இருந்த வினய் குமார் சக்சேனா நியமிக்கப்பட்டார் .

இந்த நிலையில் இன்று டெல்லியின் துணை நிலை ஆளுநராக வினய் குமார் சக்சேனா பதவியேற்றுக்கொண்டார் பதவியேற்பு விழாவில் டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் பங்கேற்றனர் .


Next Story