விநாயகர் சதுர்த்தி பண்டிகையில் விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்; போலீஸ் சூப்பிரண்டு உமா பிரசாந்த் உத்தரவு


விநாயகர் சதுர்த்தி பண்டிகையில் விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்; போலீஸ் சூப்பிரண்டு உமா பிரசாந்த் உத்தரவு
x

சிக்கமகளூரு மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையில் விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு உமா பிரசாந்த் உத்தரவிட்டுள்ளார்.

சிக்கமகளூரு;


1,659 விநாயகர் சிலைகள்

நாடு முழுவதும் வருகிற 31-ந்ேததி விநாயகர் சதுர்த்தி பண்டிகை மிகவும் கோலாகமாக கொண்டாடப்பட உள்ளது. கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக எளிமையான முறையில் நடந்த நிலையில் இந்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

இந்த நிலையில் சிக்கமகளூரு மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்திக்கு கடைபிடிக்கவேண்டிய விதிமுறைகள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உமா பிரசாந்த் கூறியதாவது:-

சிக்கமகளூரு மாவட்டத்தில் வருகிற 31-ந்தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இதில் 1,659 விநாயகர் சிலைகளை வைப்பதற்கு அனுமதி பெற்றுள்ளனர். விநாயகர் சிலைகள் வைக்கும் 39 இடங்கள் பிரச்சினைக்குரிய பகுதியாக இருக்கிறது. அந்த பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு குவித்து கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

விதிமுறைபடி நடக்க வேண்டும்

மேலும் மற்ற இடங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்படும். விநாயகர் சிலை வைப்பது, கரைக்க எடுத்து செல்வது என்பது குறித்து போலீஸ் துறை தனிப்பட்ட விதிமுறைகளை அறிவித்துள்ளது.

அந்த விதிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். குறிப்பிடும்படியாக விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகளை வைப்பவர்களே அதற்கு முழு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

நடவடிக்கை

அதேபோல் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே ஒலிப்பெருக்கியை பயன்படுத்த வேண்டும். மேலும் குளத்தில் விநாயகர் சிலைகளை கரைக்கும்போது அதனால் நீர்வாழ் உயிரினங்களும், கால்நடைகளுக்கும் பாதிப்பு ஏற்படக் கூடாது.

இதை கருத்தில் கொண்டு விநாயகர் சதுர்த்தி பண்டிகையை கொண்டாட வேண்டும். இதில் விதிமுறைகளை மீறி நடந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story