ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை - மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்


ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை - மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்
x

நபிகள் நாயகம் குறித்த சா்ச்சைக்கு எதிரான போராட்டம் வன்முறையாக மாறியது. இதனையடுத்து அவா் இந்த கருத்தை தொிவித்து உள்ளாா்.

லக்னோ,

நபிகள் நாயகம் பற்றி பா.ஜனதா செய்தித்தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா, நவீன்குமார் ஜிண்டால் ஆகியோர் தெரிவித்த கருத்துகள், சர்ச்சையை உருவாக்கி உள்ளது. இந்நிலையில், அவர்களை கைது செய்யக்கோரி நேற்று நாடு முழுவதும் முஸ்லிம்கள் போராட்டம் நடத்தினர்.

உத்தரபிரதேசம், டெல்லி, மராட்டியம் உள்ளிட்ட பல மாநிலங்களில் வெள்ளிக்கிழமை தொழுகை முடித்துக்கொண்டு வெளியேறியவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்த போராட்டம் பல இடங்களில் வன்முறையாக மாறியது. போலீசாா் வழக்கு பதிவு செய்தனா்.

இதுதொடா்பாக கருத்து தொிவித்த மத்திய ஒலிபரப்புத்துறை மந்திாி அனுராக தாக்கூா், ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை, ஜனநாயகத்தில் ஒவ்வொருவரும் தங்கள் கருத்தை முன்வைக்க வாய்ப்பளிக்க வேண்டும். பிரச்சினைகளுக்கு பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காணும் போது கல்லெறிதல்,தீவைப்பு உள்ளிட்ட வன்முறைக்கு இடமில்லை.

இந்த விவகாரத்தில் தலைவர்களோ, அமைப்புகளோ எாியும் நெருப்பில் எண்ணெய் ஊற்ற கூடாது என அவர் வலியுறுத்தினார். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வன்முறையாளா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டில் அமைதியை சீா்குலைப்பதற்காக திட்டமிட்டு வன்முறை போராட்டங்கள் நடைபெறுகிறது. என அவா் கூறினாா்.


Next Story