உத்தரபிரதேச போலீசின் விழிப்புணர்வு பிரசாரத்துக்கு உதவிய விராட் கோலி-கம்பீர் மோதல் புகைப்படம்..!


உத்தரபிரதேச போலீசின் விழிப்புணர்வு பிரசாரத்துக்கு உதவிய விராட் கோலி-கம்பீர் மோதல் புகைப்படம்..!
x

விராட் கோலி-கம்பீர் மோதல் புகைப்படத்தை உத்தரபிரதேச போலீசார் தங்களது விழிப்புணர்வு பிரசாரத்துக்கு பயன்படுத்தி உள்ளனர்.

லக்னோ,

சமீபத்தில், லக்னோவில் நடந்த ஐ.பி.எல். போட்டியின் முடிவில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை சேர்ந்த விராட் கோலிக்கும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை சேர்ந்த கவுதம் கம்பீருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. அந்த புகைப்படத்தை உத்தரபிரதேச போலீசார் தங்களது விழிப்புணர்வு பிரசாரத்துக்கு பயன்படுத்தி உள்ளனர்.

அவசர உதவிக்கு '112' என்ற உதவி எண்ணை பிரபலப்படுத்த அக்காட்சியை தங்களது 'டுவிட்டர்' பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். அதில், 'விராட்டோ (பெரியது), கம்பீேரா (தீவிரம்) எங்களுக்கு பிரச்சினை இல்லை. எந்த அவசர உதவிக்கும் 112 எண்ணை அழுத்துங்கள்'' என்று அவர்கள் கூறியுள்ளனர்.

அந்த பதிவுக்கு 15 லட்சம் பார்வைகளும், 44 ஆயிரம் 'லைக்' குறியீடுகளும் கிடைத்துள்ளன. ''வாக்குவாதத்தை தவிருங்கள். எங்களை கூப்பிடுவதை தவிர்க்காதீர்கள்'' என்றும் ஒரு பதிவு வெளியிட்டுள்ளனர்.


Next Story