பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் துன்புறுத்தல் - கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட வாட்ச்மேன்


பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் துன்புறுத்தல் - கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட வாட்ச்மேன்
x

அரியானாவில் அரசுப் பள்ளியில் வாட்ச்மேன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஜிண்ட்,

அரியானா மாநிலம் ஜிண்ட் மாவட்டத்தில் உள்ள கரசிந்து கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் வாட்ச்மேனாக பணிபுரிந்து வந்த 57 வயது நபர் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக பள்ளி முதல்வர் மற்றும் 2 ஆசியர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

உச்சனா தொகுதியின் மண்டி கலன் கிராமத்தைச் சேர்ந்தவர் ரிஷிபால். இவர் கரசிந்து கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் துப்புரவாளர் மற்றும் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் நேற்று அவர், பள்ளி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ரிஷிபாலின் உடல் அருகே கிடைத்த தற்கொலைக் குறிப்பு மற்றும் அவரது மகன் கொடுத்த புகாரின் அடிப்படையில், தற்கொலைக்குத் தூண்டியதாக பள்ளி முதல்வர் மற்றும் 2 ஆசிரியர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ரிஷிபால் அந்த தற்கொலைக் குறிப்பில், பள்ளியின் முதல்வர் சுடியா ராம், ஆசிரியர்கள் தரம்பால் மற்றும் ஹர்கேஷ் சாஸ்திரி ஆகியோரால் துன்புறுத்தப்பட்டதாக எழுதியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.


Next Story