கேரளாவில் பிரதமர் மோடி தொடங்கி வைத்த 'வாட்டர் மெட்ரோ' - ஒரே நாளில் 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பயணம்


கேரளாவில் பிரதமர் மோடி தொடங்கி வைத்த வாட்டர் மெட்ரோ - ஒரே நாளில் 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பயணம்
x

வாட்டர் மெட்ரோவில் புதன்கிழமை மட்டும் 6 ஆயிரத்து 599 பேர் பயணம் செய்துள்ளனர்.

திருவனந்தபுரம்,

இந்தியாவிலேயே முதல் முறையாக கேரளாவில் 'வாட்டர் மெட்ரோ' திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கடலில் 13 தீவுகளுக்கு சென்று கண்டு ரசிக்கலாம். இதனை கடந்த 25-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

இந்த வாட்டர் மெட்ரோவில் புதன்கிழமை மட்டும் 6 ஆயிரத்து 599 பேர் பயணம் செய்துள்ளனர். மேலும் வாட்டர் மெட்ரோவில் பயணிப்பதற்கான ஸ்மார்ட் கார்ட் விநியோகமும் தொடங்கியுள்ளது. விடுமுறை நாட்களில் வாட்டர் மெட்ரோவில் தினமும் 34 ஆயிரம் பயணிகள் வரை பயணிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.Next Story