"கர்நாடகா தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்கிறோம்" - பாஜக மூத்த தலைவர் எடியூரப்பா


கர்நாடகா தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்கிறோம்   - பாஜக மூத்த தலைவர் எடியூரப்பா
x

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

பெங்களூரு,

கர்நாடகா சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் கட்சி 129 இடங்களிலும், பாஜக 68 இடங்களிலும், மஜத 22 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.

இதன் மூலம் 129 தொகுதிகளில் முன்னிலையில் உள்ள காங்கிரஸ் கர்நாடகாவில் தனிப்பெரும்பான்மையுன் ஆட்சி அமைக்க உள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் கர்நாடக முன்னாள் முதல்-மந்திரியும், பாஜக மூத்த தலைவருமான எடியூரப்பா தேர்தல் தோல்வி குறித்து கூறியதாவது:-

பாஜகவுக்கு வெற்றி தோல்வி ஒன்றும் புதிதல்ல. இந்த முடிவுகளால் கட்சி தொண்டர்கள் பீதியடைய தேவையில்லை. கட்சியின் பின்னடைவு குறித்து ஆய்வு செய்வோம். மக்களின் இந்த தீர்ப்பை மரியாதையுடன் ஏற்றுக்கொள்கிறோம் "

.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story