நாம 4 பேர், ஒரே ஒரு ஷாட்... சர்ச்சைக்குரிய விளம்பரத்திற்கு கடும் எதிர்ப்பு


நாம 4 பேர், ஒரே ஒரு ஷாட்... சர்ச்சைக்குரிய விளம்பரத்திற்கு கடும் எதிர்ப்பு
x

சர்ச்சைக்குரிய பாலியல் பலாத்கார ஊக்குவிப்பு விளம்பரம் ஒன்றை நீக்கும்படி டுவிட்டர், யூடியூப் சேனலுக்கு அரசு உத்தரவிட்டு உள்ளது.



புதுடெல்லி,



நிறுவனங்கள் தங்களது பொருட்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் யுக்தியில் விளம்பரம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில், சமீபத்தில் ஷாட் எனப்படும் வாசனை திரவியம் வெளியிட்ட பல விளம்பரங்களில் ஒன்றில் இடம் பெற்ற காட்சிகள் பெரும் சர்ச்சையை கிளப்பின.

அதில், சிலர் கடைக்கு பொருட்கள் வாங்க வருகின்றனர். அவர்களில் ஒருவர், நாம் 4 பேர் இருக்கிறோம். ஆனால், நம்மில் ஒரே ஒருவருக்குதான் இந்த ஷாட் கிடைக்கும் என பெண் ஒருவரின் பின்னால் நின்று கொண்டு பேசுகின்றனர்.

இதனை கவனித்து, அதிர்ச்சியில் அந்த பெண் திரும்புகிறார். ஆனால், அதன்பின்னரே அவர்கள் கையில் ஷாட் வாசனை திரவியம் இருப்பது கண்டு அந்த பெண் நிம்மதி பெருமூச்சு விடுகிறார்.

இந்த விளம்பரத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின. இந்த விளம்பரம் நாட்டில் பாலியல் பலாத்கார மனநிலையை ஊக்குவிக்கிறது. இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி, விளம்பரம் தடை செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி, டெல்லி போலீசார் மற்றும் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்திற்கு டெல்லி மகளிர் ஆணையம் சார்பில் கடிதம் எழுதப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, சர்ச்சைக்குரிய வாசனை திரவிய விளம்பரம் நீக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், டுவிட்டர் மற்றும் யூடியூப் சேனல் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்து உள்ளது.




Next Story