பாஜக அரசு பண வீக்கத்தை கட்டுப்படுத்தி, எரிபொருட்களின் விலையை குறைத்துள்ளது - மத்திய மந்திரி அனுராக் தாக்கூர்


பாஜக அரசு பண வீக்கத்தை கட்டுப்படுத்தி, எரிபொருட்களின் விலையை குறைத்துள்ளது - மத்திய மந்திரி அனுராக் தாக்கூர்
x
தினத்தந்தி 29 Oct 2022 6:08 AM GMT (Updated: 29 Oct 2022 6:12 AM GMT)

மத்திய பாஜக அரசு பணவீக்கத்தை கட்டுப்படுத்தி எரிபொருட்களின் விலையை குறைத்துள்ளதாக மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, மத்திய பாஜக அரசு பணவீக்கத்தை கட்டுப்படுத்தி எரிபொருட்களின் விலையை குறைத்துள்ளோம். பாஜக ஆளும் மாநிலங்களில் எரிபொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் விலை குறைக்கப்படவில்லை.

விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வதாக காங்கிரஸ் வாக்குறுதி அளித்தது. பஞ்சாப், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் அவர்களால் அதனை செய்ய முடியவில்லை. பொய்யான வாக்குறுதிகளை தான் அவர்கள்(காங்கிரஸ்) அளிக்கிறார்கள்.

ரூபாய் நோட்டுகளில் கடவுள்கள் உருவங்களை இடம்பெற செய்ய வேண்டும் என டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் வலியுறுத்தியது தொடரபாக அவர் கூறுகையில், அவர்(கெஜ்ரிவால் ) தனது ஊழல்களை பற்றி பேசக்கூடாது என்பதற்காக புதிய பிரச்சினைகளை கிளப்புகிறார். என்றார்.

நீங்கள் (கெஜ்ரிவால்) டெல்லியில் உள்ள இஸ்லாமிய மதகுருக்களுக்கு ஆண்டுக்கு ரூ.18,000 வழங்கி வருகிறீர்கள். அதேபோல பாதிரியார்கள், குருத்வாரா கிராந்திகள், போதகர்கள் ஆகியோருக்கு ரூ.18,000 வழங்குவீர்களா? உங்களால் ஏன் முடியவில்லை? இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story