தமிழகத்திற்கு கூடுதலாக காவிரி நீரை திறந்துவிட்டுள்ளோம் - டி.கே.சிவகுமார்


தமிழகத்திற்கு கூடுதலாக காவிரி நீரை திறந்துவிட்டுள்ளோம் -  டி.கே.சிவகுமார்
x

தமிழகத்திற்கு கூடுதலாக காவிரி நீரை திறந்துவிட்டுள்ளோம் என கர்நாடகா துணை முதல் மந்திரி டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார்

பெங்களூரு,

காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் தமிழகத்திற்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்கும்படி கர்நாடகத்திற்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி கர்நாடக அரசு காவிரியில் தண்ணீரை திறந்துவிட்டுள்ளது. இதன்படி கர்நாடகாவில் இருந்து தற்போது தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தமிழகத்திற்கு கூடுதலாக காவிரி நீரை திறந்துவிட்டுள்ளோம் என கர்நாடகா துணை முதல்-மந்திரி டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது ,

மேலாண்மை ஆணையம் கூறியதை விட தமிழகத்திற்கு கூடுதலாகவே நீரை திறந்துவிட்டுள்ளோம். நிர்ணயித்த அளவை விட கூடுதலாக நீரைத் திறந்து விட்டதாக தமிழகத்திடம் நாங்கள் கூறிவிட்டோம். கர்நாடக மாநில அணைகளில் போதுமான தண்ணீர் இல்லை என்பது தமிழகத்திற்கு தெரியும். கர்நாடகாவில் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர், என தெரிவித்தார்.


Next Story