Normal
மாநிலத்தில் பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்த முடிவு எடுத்துள்ளோம் - உத்தரகாண்ட் முதல்-மந்திரி
மாநிலத்தில் பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்த முடிவு எடுத்துள்ளோம் என்று உத்தரகாண்ட் முதல்-மந்திரி தெரிவித்துள்ளார்.
டேராடூன்,
உத்தரகாண்ட் மாநிலம் ஷம்பவத் பகுதியில் இன்று நடந்த நிகச்சியில் அம்மாநில முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் பேசிய புஷ்கர் சிங், மாநிலத்தில் பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்த நாங்கள் முடிவு எடுத்துள்ளோம். கோவாவிற்கு அடுத்தபடியாக பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்தும் இரண்டாவது மாநிலமாக உத்தரகாண்ட் இருக்கும். மக்கள் எந்த மதம், எந்த பிரிவை சேர்ந்தவர்களாக இருந்தாலும் நாங்கள் பொதுசிவில் சட்டத்தை கொண்டு வருவோம்' என்றார்.
கோவாவில் பொதுசிவில் சட்டம் அமலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story