பெசாவரில் மசூதி வளாகத்தில் நிகழ்ந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்


பெசாவரில் மசூதி வளாகத்தில் நிகழ்ந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்
x

பாகிஸ்தான் பெசாவரில் மசூதி வளாகத்தில் நிகழ்ந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

We strongly condemn this attack, which has taken the lives of so many people," tweets MEA spokesperson Arindam Bagchiபுதுடெல்லி,

பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்கவா மாகாணத் தலைநகர் பெஷாவரில் பாதுகாப்பு மிகுந்த போலீஸ் லைன் பகுதி உள்ளது. இங்குள்ள மசூதியில் நேற்று மதியம் முஸ்ஸிம்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதில் மசூதி கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதனால், அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. காவல் துறையினரும், மீட்பு படையினரும் விரைந்து வந்து, மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். குண்டுவெடிப்பில் காயம் அடைந்தவர்கள், இடிபாடுகளில் சிக்கி இருந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

கடந்த 18 மணி நேரமாக மீட்புப் பணிகள் நடந்து வரும் சூழலில் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், உயிரிழப்பு குறித்து லேடி ரீடிங் மருத்துவமனை செய்தித் தொடர்பாளர் கூறும்போது, "மசூதி தாக்குதலில் உயிரிந்தவர்களின் எண்ணிக்கை 92 ஆக அதிகரித்துள்ளது. 50-க்கும் அதிகமானவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது" என்றார்.

இந்தநிலையில் பெசாவரில் மசூதி வளாகத்தில் நிகழ்ந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. "நேற்று பெஷாவரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு இந்தியா ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. பலரின் உயிரைப் பறித்த இந்தத் தாக்குதலை இந்தியா வன்மையாக கண்டிக்கிறது என இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி டுவீட் செய்துள்ளார்


Next Story