பா.ஜனதா திட்டங்களை ரத்து செய்ய மாட்டோம்; மந்திரி பிரியங்க் கார்கே பேட்டி
பா.ஜனதா திட்டங்களை ரத்து செய்ய மாட்டோம் என்று மந்திரி பிரியங்க் கார்கே தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
கிராம வளர்ச்சி-பஞ்சாயத்து ராஜ் மந்திரி பிரியங்க் கார்கே பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
பா.ஜனதா ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட திட்டங்களை ரத்து செய்ய மாட்டோம். அத்தகைய எண்ணம் எங்களுக்கு கிடையாது. மக்களின் நலனுக்காக திட்டங்கள் இருக்க வேண்டும். அரசியலில் இருப்பவர்களுக்கு திட்டங்கள் இருக்க கூடாது. பயனற்ற திட்டங்களை கைவிடுவதின் மூலம் கன்னடர்கள் மீதான சுமை குறையும். மக்கள் நலன் சார்ந்த திட்டங்களுக்கு நாங்கள் முக்கியத்துவம் அளிப்போம்.
கர்நாடக அரசு அறிவித்துள்ள இலவச திட்டங்களால் மக்களின் பொருளாதார நிலை உயரும். அவர்களின் வாழ்க்கை தரமும் உயரும் என்ற நம்பிக்கை உள்ளது. வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்களை முன்னேற்ற நாங்கள் திட்டங்களை வகுத்து செயல்படுத்துவோம்.
இவ்வாறு பிரியங்க் கார்கே கூறினார்.
Related Tags :
Next Story