அமர்நாத் யாத்திரைக்கு சென்ற தார்வாரை சேர்ந்த 5 பேர் பத்திரமாக உள்ளனர்


அமர்நாத் யாத்திரைக்கு சென்ற  தார்வாரை சேர்ந்த 5 பேர் பத்திரமாக உள்ளனர்
x
தினத்தந்தி 10 July 2023 6:45 PM GMT (Updated: 10 July 2023 6:45 PM GMT)

அமர்நாத் யாத்திரைக்கு சென்ற தார்வாரை சேர்ந்த 5 பேர் பத்திரமாக உள்ளனர்.

உப்பள்ளி-

ஜம்மு காஷ்மீர் மாநிலம் அமர்நாத் என்ற பகுதியில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரை சென்று வருகிறார்கள். இதேப்போல் இந்த ஆண்டும் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் அமர்நாத் யாத்திரைக்கு சென்றுள்ளனர்.

இந்த நிலையில் மோசமான வானிலை காரணமாக அமர்நாத் யாத்திரை நிறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து யாத்திரை சென்ற பக்தர்கள் அங்கு சிக்கி தவித்து வருகிறார்கள். இதில் கர்நாடகத்தை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் அங்கு சிக்கி உள்ளனர். அவர்களை மீட்டு வர மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில், தார்வாரில் இருந்து ராகேஷ் உள்பட 5 பேர் அமர்நாத் யாத்திரைக்கு சென்றனர். தற்போது அமர்நாத் பகுதியில் மோசமான வானிலை நிலவி வருவதால் அங்கு மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதனால் தார்வாரில் இருந்து சென்றவர்கள் அமர்நாத் கோவிலுக்கு செல்ல முடியாமலும், ஜம்மு காஷ்மீருக்கு திரும்பி வர முடியாமலும் தவித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், தார்வாரில் இருந்து சென்ற 5 பேரும் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளனர். அதில், மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் இருந்து எங்கள் 5 பேரையும் துணை ராணுவத்தினர் ஹெலிகாப்டர் மூலம் மீட்டு பத்திரமான இடத்தில் தங்க வைத்துள்ளனர். தற்போது நாங்கள் பாதுகாப்பாக உள்ளோம். விரைவில் 5 பேரும் தார்வார் வந்து சேருவோம். எங்களை பற்றி கவலைபட வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. இதனை பார்த்த உறவினர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.


Next Story