மோடி அரசு பயங்கரவாதத்தை சகித்துக்கொள்ளாது: மத்திய அமைச்சர் அனுராக் தாகூர்


மோடி அரசு பயங்கரவாதத்தை சகித்துக்கொள்ளாது: மத்திய அமைச்சர் அனுராக் தாகூர்
x

பயங்கரவாதத்தை மோடி அரசு சகித்துக் கொள்ளாது என்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் கூறினார்.

புதுடெல்லி,

டெல்லியில் செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அனுராக் தாகூர் கூறியதாவது: சர்ஜிக்கல் ஸ்டிரைக் மற்றும் பாலகோட் தாக்குதல்களுக்குப் பிறகு ஜம்மு-காஷ்மீரில் 2014 முதல் 168 சதவீதம் பயங்கரவாதம் குறைந்துள்ளது.

பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்வதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும், இல்லையெனில் அவர்களே அதன் விளைவை எதிர்கொள்ள நேரிடும் என பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி செய்பவர்களுக்கு தண்டனை விகிதம் 94 சதவீதம் என்று கூறியவர், சமூக நலன் என்ற சாக்குப்போக்கில் தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் ஒரு அமைப்பை தடை செய்ய மோடி அரசாங்கம் தயங்கவில்லை. தீவிரவாத அமைப்புகளுக்கு எதிரான நடவடிக்கை தொடரும்" என்றார்.


Next Story