மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி மந்திரி சபையில் மாற்றம்


மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி மந்திரி சபையில் மாற்றம்
x

கோப்புப்படம்

மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜியின் மந்திரி சபையில் மாற்றம் செய்யப்பட்டது.

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நேற்று திடீரென தனது மந்திரி சபையில் சிறிய மாற்றங்களை மேற்கொண்டார்.

அங்கு சுற்றுலாத்துறை மந்திரியாக இருந்த பாபுல் சுப்ரியோவுக்கு தகவல் தொழில் நுட்பம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையை ஒதுக்கினார்.

தொழில்நுட்பக்கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை இணை மந்திரியாக இருந்த இந்திரனில் சென், தனிப்பொறுப்புடன் கூடிய சுற்றுலாத்துறை இணை மந்திரி ஆனார்.

இதைப்போல வனத்துறை மந்திரி ஜோதி பிரியா மாலிக்கிற்கு பொது தொழில்கள் மற்றும் தொழில்துறை மறுகட்டமைப்பு கூடுதலாக ஒதுக்கப்பட்டது.

மாநிலத்தில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக துபாய் மற்றும் ஸ்பெயின் நாடுகளுக்கு மம்தா பானர்ஜி இன்று (செவ்வாய்க்கிழமை) சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் நிலையில், இந்த மாற்றத்தை அவர் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.


Next Story