ஜனாதிபதி திரவுபதி முர்முவுடன் மேற்கு வங்க கவர்னர் ஆனந்த போஸ் சந்திப்பு


ஜனாதிபதி திரவுபதி முர்முவுடன் மேற்கு வங்க கவர்னர் ஆனந்த போஸ் சந்திப்பு
x

ஜனாதிபதி திரவுபதி முர்முவை மேற்கு வங்க கவர்னர் சி.வி.ஆனந்த போஸ் நேரில் சந்தித்து பேசினார்.

புதுடெல்லி,

மேற்கு வங்க கவர்னருக்கும், மாநில அரசுக்கும் இடையே தொடர்ந்து பல்வேறு விவகாரங்களில் மோதல் போக்கு நீடித்து வருகிறது. மேற்கு வங்க சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட மசோதாக்களை கவர்னர் நிறுத்தி வைத்துள்ளதாகவும், பல்கலைக்கழக செயல்பாடுகள் உள்ளிட்ட விவகாரங்கள் கவர்னர் தொடர்ந்து தலையிடுவதாகவும் அந்த மாநிலத்தின் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த நிலையில் மேற்கு வங்க கவர்னர் சி.வி.ஆனந்த போஸ், டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று ஜனாதிபதி திரவுபதி முர்முவை நேரில் சந்தித்து பேசினார். அப்போது மேற்கு வங்கத்தில் கல்வித் தரத்தை மேம்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் தன்னாட்சி நிர்வாகம் குறித்து ஜனாதிபதியிடம் கவர்னர் சி.வி.ஆனந்த போஸ் அறிக்கை அளித்தார்.

மேலும் கலை, கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை மேம்படுத்துவதற்கான 'கலாகிராந்தி' இயக்கத்தை ஊக்குவிப்பதற்காக மேற்கு வங்க கவர்னர் மாளிகை சார்பில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் குறித்தும் ஜனாதிபதியிடம் கவர்னர் சி.வி.ஆனந்த போஸ் விளக்கமளித்துள்ளார்.


Next Story