மேற்கு வங்காளத்தின் சாந்திநிகேதனுக்கு யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில் அங்கீகாரம்


மேற்கு வங்காளத்தின் சாந்திநிகேதனுக்கு யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில் அங்கீகாரம்
x
தினத்தந்தி 17 Sep 2023 3:06 PM GMT (Updated: 17 Sep 2023 4:30 PM GMT)

யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில் மேற்கு வங்காளத்தின் சாந்திநிகேதன் சேர்க்கப்பட்டு உள்ளது என இன்று அறிவிக்கப்பட்டது.

ரியாத்,

மேற்கு வங்காளத்தின் பீர்பும் மாவட்டத்தில் சாந்திநிகேதன் அமைந்துள்ளது. கவிஞர் மற்றும் தத்துவயியலாளராக இருந்தவர் ரவீந்திரநாத் தாகூர். கடந்த 1901-ம் ஆண்டு அவரால் உருவாக்கப்பட்டது சாந்திநிகேதன். உறைவிட பள்ளி மற்றும் பழமையான இந்திய பாரம்பரியங்களை அடிப்படையாக கொண்ட கலைக்கான ஒரு மையம் ஆகவும் அது திகழ்கிறது.

1921-ம் ஆண்டு சாந்திநிகேதனில் உலக பல்கலைக்கழகம் ஒன்று நிறுவப்பட்டது. மனிதஇனத்திற்கான ஒற்றுமை அல்லது விஸ்வ பாரதியை அங்கீகரிக்கும் வகையில் இது அமைக்கப்பட்டது.

ஒவ்வோர் ஆண்டும் ஆயிரக்கணக்கான சுற்றுலாவாசிகள் இந்த பகுதிக்கு வந்து பார்வையிட்டு செல்கின்றனர். இந்த கலாசார தலத்திற்கு யுனெஸ்கோ அங்கீகாரம் கிடைப்பதற்காக நீண்டகாலம் வரை இந்தியா போராடி வந்தது.

இந்நிலையில், யுனெஸ்கோவின் பாரம்பரி கமிட்டி சார்பில் 45-வது கூட்டத்தொடர் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் இன்று நடந்தது. இதில், மேற்கு வங்காளத்தின் சாந்திநிகேதன் யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளது என அறிவிக்கப்பட்டது.

இதுபற்றி, தன்னுடைய எக்ஸ் சமூக ஊடகத்தில் யுனெஸ்கோ இன்று வெளியிட்ட பதிவில், இந்தியாவின் சாந்திநிகேதன், யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளது. வாழ்த்துகள் என தெரிவித்து உள்ளது.


Next Story