புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் சிறப்பு அம்சங்கள் என்னென்ன?


புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
x

ஆங்கிலேயர் ஆட்சியில் கவுன்சில் ஹவுஸ் என்று அழைக்கப்பட்ட நாடாளுமன்றக் கட்டிடம், வைஸ்ராய் லார்ட் இர்வினால் கட்டப்பட்டது.

புதுடெல்லி,

ஆங்கிலேயர் ஆட்சியில் கவுன்சில் ஹவுஸ் என்று அழைக்கப்பட்ட நாடாளுமன்றக் கட்டிடம், வைஸ்ராய் லார்ட் இர்வினால் கட்டப்பட்டது. இது, சுமார் 96 வருடங்களுக்கு முன் ஜனவரி 18-ல் திறக்கப்பட்டு இன்று வரை செயல்பாட்டில் உள்ளது. இந்நிலையில் பாதுகாப்பு மற்றும் கூடுதல் வசதிகளுக்காக புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு வருகிற 28-ந்தேதி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். கடந்த 2020 டிசம்பரில் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.

* புதிய கட்டிடம் சுமார் 65,000 சதுர மீட்டர் பரப்பளவில் முக்கோண வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.

* மக்களவையில் இந்தியாவின் தேசியப் பறவையான மயில் நிறத்தில் இருக்கைகள் அமைகின்றன.

* புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் 1,272 உறுப்பினர்கள் வரை அமரும் அளவில் இது விசாலமாக அமைக்கப்பட்டுள்ளது.

* மக்களவையில் 888, மாநிலங்களவையில் 384 என இருக்கைகள் அமைகின்றன

* இந்த வளாகத்தில் உள்ள அலுவலகங்கள் அதிநவீன தகவல் தொடர்பு தொழில்நுட்பத்துடன் கூடியதாக வசதிகள் இடம்பெற்றுள்ளது.

* புதிய கட்டிடத்தில், மிக நவீன ஆடியோ-விஷுவல் வசதிகளுடன் கூடிய, பெரிய ஆலோசனைக் கூட்டங்கள் நடத்துவதற்கான அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளது.

புதிய பாராளுமன்ற கட்டிடம் மாற்றுத்திறனாளிகள் எளிதாக சென்று வர தேவையான வசதிகளுடன் அமைக்கப் பட்டுள்ளது

* 'அரசியலமைப்பு அரங்கு' எனும் பெயரில் ஓர் அரங்கு அமைகிறது. இதை சுற்றிலும் இரு அவை எம்.பி.க்களுக்காக நூலகம், நாடாளுமன்ற குழுக்களுக்கான அறைகள் உள்ளிட்டவை இடம்பெறுகின்றன. நாடாளுமன்றம் தொடர்புடைய விழாக்கள் இந்த அரங்கில் நடைபெறும் என கூறப்படுகிறது.

* பழைய கட்டிடம் முழுவதும் அருங்காட்சியகமாக மாற உள்ளது.

* நிலநடுக்கத்தால் பாதிக் காத அளவுக்கு வலிமையுடன் தொழில் நுட்பங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

* புதிய நாடாளுமன்ற கட்டிடம், டாடா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனத்தால், 971 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு முடியும் தருவாயில் உள்ளது.


Next Story