பெண்களுக்கு மாதம் ரூ.1,000 தருவதாக பகவந்த் மான் அளித்த வாக்குறுதி என்ன ஆனது - அமித்ஷா கேள்வி


பெண்களுக்கு மாதம் ரூ.1,000 தருவதாக பகவந்த் மான் அளித்த வாக்குறுதி என்ன ஆனது - அமித்ஷா கேள்வி
x

பெண்களுக்கு மாதம் ரூ.1,000 தருவதாக பகவந்த் மான் அளித்த வாக்குறுதி என்ன ஆனது என்று அமித்ஷா கேள்வி எழுப்பியுள்ளார்.

குர்தாஸ்பூர்,

பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான், அரவிந்த் கெஜ்ரிவாலுடன் சுற்றுப்பயணம் செய்ததால் பஞ்சாப்பின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா குற்றஞ்சாட்டியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் 9 ஆண்டுகால ஆட்சியின் சாதனை விளக்க கூட்டம், குர்தாஸ்பூரில் நடைபெற்றது. அப்போது, பேசிய மந்திரி அமித்ஷா, டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை வெளியூர்களுக்கு அழைத்துச் செல்லும் ஒரு வேலையை மட்டும் பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் பார்த்து வருவதாக குற்றம்சாட்டினார்.

அரவிந்த் கெஜ்ரிவாலுடன் பகவந்த் மான் சுற்றுப் பயணம் செய்வதால், பஞ்சாப் மாநிலத்தின் சட்டம்- ஒழுங்கு மோசமாக இருந்து வருகிறது என்றும் அமித்ஷா குற்றஞ்சாட்டியுள்ளார். பஞ்சாபில் ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் தருவதாக பகவந்த் மான் அளித்த வாக்குறுதி என்ன ஆனது என்றும் அமித் ஷா கேள்வி எழுப்பினார்.


Next Story