குலாம் நபி ஆசாத் விலகலுக்கு காங்கிரஸ் கட்சியின் பதில் என்ன?
குலாம் நபி ஆசாத் விலகலுக்கு காங்கிரஸ் கட்சியின் சார்பில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
காங்கிரஸ் கட்சியில் இருந்து குலாம் நபி ஆசாத் விலகி இருப்பது குறித்து அந்தக் கட்சி கருத்து கூறி உள்ளது.
இதுபற்றி அந்தக் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், "காங்கிரஸ் தலைமையால் மிகுந்த மரியாதையுடன் நடத்தப்பட்டவர், தனது மோசமான தனிப்பட்ட தாக்குதல்களால் அதற்கு துரோகம் செய்துள்ளார். இது அவரது உண்மையான தன்மையை வெளிப்படுத்தி உள்ளது. குலாம் நபி ஆசாத்தின் மரபணுக்கள் மோடி சார்ந்ததாகி விட்டன " என தெரிவித்தார்.
கட்சியின் செய்தி தொடர்பாளர் பவன் கெரா கருத்து தெரிவிக்கையில், " உங்கள் மாநிலங்களவை பதவி முடிவுக்கு வந்த உடனேயே நீங்கள் அமைதி இழந்து விட்டீர்கள். உங்களால் பதவியின்றி ஒரு வினாடி கூட இருக்க முடியாது" என சாடி உள்ளார்.
Related Tags :
Next Story