எல்லையில் இந்தியா - சீன ராணுவ வீரர்கள் மோதல்: அமெரிக்க கருத்து என்ன?


எல்லையில் இந்தியா - சீன ராணுவ வீரர்கள் மோதல்: அமெரிக்க கருத்து என்ன?
x

(Representational/PTI)

எல்லை விவகாரம் தொடர்பாக இரு நாடுகளும் தங்களுக்கு உள்ள பல்வேறு பேச்சுவார்த்தை வழிகள் மூலமாக தீர்த்துக்கொள்வதை நாங்கள் ஊக்குவிக்கிறோம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

வாஷிங்டன்,

இந்தியாவின் அருணாசல பிரதேசத்தை தெற்கு தீபெத் என்று கூறி உரிமை கோரி வரும் சீனா அவ்வப்போது எல்லையில் அத்துமீறியும் வருகிறது. சீனாவின் இந்த அத்துமீறலை எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருக்கும் நமது நாட்டு வீரர்களும் உன்னிப்பாக கண்காணித்து முறியடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அருணாசல பிரதேசத்தின் தவாங் செக்டாரில் அத்துமீறிய சீன வீரர்களை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். அப்போது இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கும் கை கலப்பு ஏற்பட்டது.

இந்திய வீரர்கள் துணிச்சலுடன் செயல்பட்டு சீன வீரர்களை விரட்டியடித்தனர். இந்த மோதலில் இரு தரப்பு ராணுவ வீரர்களுக்கும் லேசான காயம் ஏற்பட்டது. சர்ச்சைக்குரிய எல்லை விவகாரம் தொடர்பாக இரு நாடுகளும் தங்களுக்கு உள்ள பல்வேறு பேச்சுவார்த்தை வழிகள் மூலமாக தீர்த்துக்கொள்வதை நாங்கள் ஊக்குவிக்கிறோம்" என்றார்.


Next Story