பள்ளிகள், கல்லூரிகளில் எப்போது தேசியக் கொடி ஏற்ற வேண்டும்? - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு


பள்ளிகள், கல்லூரிகளில் எப்போது தேசியக் கொடி ஏற்ற வேண்டும்? - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
x

சுதந்திர தினவிழா அன்று பள்ளிகள், கல்லூரிகளில் எப்போது தேசியக் கொடி ஏற்ற வேண்டும்? என வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளது.

சென்னை,

சுதந்திர தினவிழா வருகிற 15-ந்தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, அனைத்து அரசு துறை அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், கட்சி அலுவலகங்கள் உள்பட பல்வேறு பகுதிகளில் தேசிய கொடி ஏற்றி கொண்டாடும் நிகழ்வு நடைபெறும். அந்த வகையில் பள்ளிகள், கல்லூரிகளில் தேசியக் கொடி ஏற்றும் நிகழ்வு குறித்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு இருக்கின்றன.

இதுதொடர்பாக பல்கலைக்கழக மானியக்குழு அனைத்து கல்லூரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையுடன், அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை இணைத்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது,

அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்களில் சுதந்திர தின விழா அன்று தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி காலை 9 மணிக்கு பிறகு தொடங்கப்பட வேண்டும்.

கொரோனா சூழ்நிலையை பொறுத்து, நேரடியாகவோ அல்லது ஆன்லைன் வழியாகவோ(விர்ச்சுவல் பார்மெட்) தேசிய கொடி ஏற்றும் நிகழ்வை ஏற்பாடு செய்யலாம்.

நேரடியாக நடக்கும் நிகழ்வில் அனைத்து பள்ளி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், பணியாளர்கள் பங்கேற்க வேண்டும். பெற்றோர், பாதுகாவலர்கள் பங்கேற்க ஊக்குவிக்கப்பட வேண்டும்.

தேசிய போர் நினைவு சின்னம் தொடர்பான வீடியோக்கள் மற்றும் அது தொடர்பாக தகவல்களை அன்றைய தினம் மக்களிடம் கொண்டு செல்வதற்கு பயன்படுத்தலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழிகாட்டு நெறிமுறைகள் பள்ளிகள், கல்லூரிகளுக்கு பொதுவாக வெளியிடப்பட்டவை ஆகும்.


Next Story