உண்மையான பிரச்சினைகளுக்கு பிரதமர் மோடி எப்போது தீர்வு காண்பார்? ப.சிதம்பரம் கேள்வி
2014 பாஜக ஆட்சி அமைந்ததில் இருந்தே இந்தியா இந்தக் குறியீட்டில் பின்னடைவை சந்தித்து வருவதாகவும் விமர்சித்துள்ளார்.
புதுடெல்லி,
சர்வதேச பட்டினி குறியீட்டு பட்டியலில் இந்தியா 107-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. பாகிஸ்தான், வங்காளதேசம், நேபாளத்தை விட இந்தியா பட்டியலில் மோசமான இடத்தில் உள்ளது. பட்டினிக் குறியீட்டை சுட்டிக்காட்டி மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது;-
பிரதமர் மோடி எப்போது ஊட்டச்சத்து குறைபாடு, பட்டினி, ஸ்டன்டிங், வேஸ்டிங் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பார்? இந்தியாவில் 22.4 கோடி மக்கள் ஊட்டச்சத்து குறைபாடு கொண்டவர்களாகக் கருதப்படுகிறார்கள். சர்வதேச பட்டினிக் குறியீட்டில் இந்தியாவின் இடம் 107 ஆக உள்ளது. 121 நாடுகளில் 107 என்பது கிட்டத்தட்ட கடைசி இடம் தானே" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், 2014 பாஜக ஆட்சி அமைந்ததில் இருந்தே இந்தியா இந்தக் குறியீட்டில் பின்னடைவை சந்தித்து வருவதாகவும் விமர்சித்துள்ளார்.