படகு விபத்து சம்பவத்திற்கு காரணமான அதிகாரிகள் யார்? - கேரள ஐகோர்ட்டு பரபரப்பு கேள்வி


படகு விபத்து சம்பவத்திற்கு காரணமான அதிகாரிகள் யார்? - கேரள ஐகோர்ட்டு பரபரப்பு கேள்வி
x

படகு விபத்து சம்பவம் தொடர்பாக கேரள ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தனூர்-பரப்பனங்காடி கடற்கரையில் சுற்றுலா பயணிகள் சென்ற சொகுசு படகு எதிர்பாராதவிதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் குழந்தைகள், முதியவர்கள் உள்பட 22 பேர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கேரளாவை உலுக்கிய இந்த விபத்துக்கு அதிகப்படியான பயணிகளை படகில் ஏற்றி சென்றதே காரணம் என்பதும், மீன்பிடி படகை சுற்றுலா படகாக மாற்றி அமைத்திருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதனிடையே தலைமறைவாக இருந்த படகின் உரிமையாளர் நாசர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கேரள ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த துயர சம்பவத்தைக் கண்ட பின்னர் கண்ணை மூடிக்கொண்டு இருக்க முடியாது என்றும், இது போன்ற சம்பவம் கேரளாவில் நடப்பது முதல் முறை அல்ல என்றும் கோர்ட்டு தெரிவித்துள்ளது.

விபத்திற்கு படகு உரிமையாளர் மட்டுமே காரணம் இல்லை என்றும், அத்தகைய படகு சேவை நடத்துவதற்கு உதவிய பொறுப்பு அதிகாரிகள் யார் என்றும் கேள்வி எழுப்பியுள்ளது. இந்த வழக்கை நீதிபதி தேவன் ராமச்சந்திரன் அமர்வு விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Next Story